பெரிக்காத்தான் கூட்டணியிலிருந்து விலகவேண்டியது பாஸ் கட்சிதான்: முகைதீன்

பெரிக்காத்தான் கூட்டணியிலிருந்து விலகவேண்டியது பாஸ் கட்சிதான்: முகைதீன்

1 mins read
811581af-bb57-4a82-939d-d21a5c74a76a
பெர்சத்து கட்சியின் தலைவர் முகைதீன் யாசின். - படம்: மலாய் மெயில்

கோலாலம்பூர்: பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை விட்டுப் பெர்சத்து கட்சி வெளியேறப் போவதில்லை என்றும் விருப்பமில்லை என்றால் பாஸ் கட்சிதான் வெளியேற வேண்டும் என்றும் பெர்சத்து கட்சியின் தலைவர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

கூட்டணியின் தலைமைப் பொறுப்பு மற்றும் அணுகுமுறைகள் குறித்து பாஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் விமர்சனம் செய்து வந்த நிலையில், முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் அதற்குப் பதிலளித்துள்ளார்.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி உருவாக பெர்சத்து கட்சியே முக்கியக் காரணமாக இருந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

கூட்டணியை வலுப்படுத்தவே நாங்கள் பாடுபடுகிறோம். இதில் யாருக்கேனும் உடன்பாடு இல்லை என்றால் அவர்கள் தாராளமாக வெளியேறலாம் என்று முகைதீன் கூறினார்.

இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தலைதூக்கியுள்ள சூழலில் அவரது இந்த அறிக்கை மலேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணித் தலைமை குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் வேளையில், தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

இருப்பினும், கூட்டணியின் ஒற்றுமையைக் காக்கத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பெர்சத்து கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
பெர்சத்துமுகைதீன் யாசின்தொகுதிப் பங்கீடு