குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம்; $133,000 போதுமானதா?

குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம்; $133,000 போதுமானதா?

1 mins read
c5d9a0e7-b96c-4320-a97b-76d6f75944a0
படம்: STAY.GOLDENDESIGN/INSTAGRAM -

அமெரிக்காவில் குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு தற்போது அதிக முன்னுரிமைக் கொடுத்து வருகின்றனர் பெற்றோர்.

குறிப்பாக அவர்கள் 133,000 வெள்ளிகூட செலவழிக்கத் தயாராக உள்ளதாக அமெரிக்க நாளிதழ்கள் கூறுகின்றன.

அண்மையில் லாஸ் ஏஞ்சலிஸ் பார்க்கில் 6 வயது சிறுவன் வில்லியமின் பிறந்தநாள் கொண்டாட்டம் படு விமரிசையாக நடந்தது.

கண்ணைக்கவரும் ஆடைகள், உணவுகள், வரவேற்புகள், விளையாட்டுகள் என வில்லியம்ஸின் பெற்றோர் அமர்க்களப்படுத்தினர்.

கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக திட்டமிட்டு பல்வேறு தரப்பினருடன் இணைந்து வில்லியம்ஸ் பெற்றோர் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

பிறந்தநாள் விழாவைக் கண்ட விருந்தினர்களும் தற்போது தங்களது குழந்தைகளுக்கு பிறந்தநாள் விழாக்கான திட்டத்தை தீட்டத்தொடங்கியுள்ளனர்.

பிறந்தநாள் விழாவைத் திட்டமிட்டு நடத்தவே சில நிறுவனங்கள் உள்ளதாம். வசதிக்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் சேவைகள் செய்து தருகின்றனர்.

சமூக ஊடகங்கள் வழியும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்