தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அலையாடலின்போது விபரீதம்; வாள்மீன் குத்தி பெண் மரணம்

1 mins read
0e558cbd-c2c3-487e-81d2-9c6185103b60
36 வயது திருவாட்டி கியூலியா மான்ஃபிரினி. - படங்கள்: அவேவ் டிராவல், கியூலியா மான்ஃபிரினி இன்ஸ்டகிராம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மேற்கு சுமத்ரா கடற்பகுதியில் அலையாடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இத்தாலியப் பெண்ணை வாள்மீன் குத்தியது.

இதில் அப்பெண் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் மென்டாவாய் ஐலண்ட்ஸ் ரீஜன்சி எனும் பிரபல அலையாடல் தளத்தில் அக்டோபர் 18ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

36 வயது திருவாட்டி கியூலியா மான்ஃபிரினி , கடலில் அலையாடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவர்மீது வாள்மீன் எதிர்பாராத வகையில் பாய்ந்து அவரது நெஞ்சுப் பகுதியை அதன் கூர்மையான மூக்கால் குத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் அவரது நெஞ்சுப் பகுதியில் 5 சென்டிமீட்டர் ஆழத்துக்குக் காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

திருவாட்டி மான்ஃபிரினிக்கு அவரது நண்பர்கள் உடனடியாக முதலுதவி வழங்கி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

திருவாட்டி மான்ஃபிரினியின் உடல் இத்தாலிக்குக் கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

திருவாட்டி மான்ஃபிரினியின் மரணம் அவரது சொந்த ஊரான வெனாரியா ரியாலேயின் மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளதாக அந்நகரின் மேயர் திரு ஃபேபியோ கியூவிலி கூறினார்.

குறிப்புச் சொற்கள்