என்விடியா தலைமை நிர்வாகியின் மேலங்கி ஒரு மில்லியன் டாலருக்கு ஏலம்

என்விடியா தலைமை நிர்வாகியின் மேலங்கி ஒரு மில்லியன் டாலருக்கு ஏலம்

2 mins read
97d28f4e-ea18-4172-aa3c-8eccec5735c6
என்விடியா தலைமை நிர்வாகி ஜென்சன் ஹுவாங் அணிந்துள்ள தோலாலான மேலங்கி. - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: உலகின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான என்விடியாவின் தலைமை நிர்வாகி ஜென்சன் ஹுவாங் அணிந்த கறுப்பு நிறத் தோல் மேலங்கி, நியூயார்க்கில் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) ஏலத்தில் 960,000 அமெரிக்க டாலருக்கு விலைபோனது.

இது, அதன் உண்மையான விலையான 60,000 டாலரைப்போல் 16 மடங்காகும் என்று சோத்பிஸ் ஏல நிறுவனம் தெரிவித்தது.

அந்த ‘டாம் ஃபோர்ட்’ வகை மேலங்கியை ஏலம் எடுக்க 45 சேகரிப்பாளர்கள் போட்டி போட்டதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

“செயற்கை நுண்ணறிவுக் காலத்தின் மிக முக்கிய அடையாளங்களில் ஒருவரோடு நெருங்கிய தொடர்புடைய ஒரு பொருள் இது,” என்று சோதேபிஸ் நிறுவனத்தின் நவீன சேகரிப்புப் பிரிவுத் தலைவர் பிராம் வாக்டர் வருணித்தார்.

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் அணிந்த கறுப்பு நிற ‘டர்டில்நெக்’ ஆடைகள் அல்லது மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பர்க்கின் அலமாரியை நிறைத்திருக்கும் சாம்பல் நிற டி-ஷர்ட்டுகளைப் போலவே, ஜென்சன் இந்தத் தோல் மேலங்கிகளைத் தமது தனித்துவமான அடையாளமாக மாற்றியுள்ளார்.

தாம் பங்கேற்கும் அனைத்துப் பொது நிகழ்ச்சிகளிலும் இத்தகைய தோலாலான மேலங்கி அணிவதைத் திரு ஜென்சன் வழக்கமாகக் கொண்டுள்ளார். 2021ஆம் ஆண்டு ‘டைம்’ சஞ்சிகையின் முகப்புப் பக்கத்திலும் அவர் அவ்வாறே காட்சியளித்தார்.

இவரது தலைமையின்கீழ் இயங்கும் என்விடியா சில்லு தயாரிப்பு நிறுவனம், உலகிலேயே சந்தைமதிப்புமிக்க நிறுவனமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

இந்த ஏலத்தின்மூலம் கிடைத்த தொகை ‘எட்ஜ் இன்ஸ்டிடியூட்’ என்ற லாப நோக்கற்ற அமைப்பிற்கு வழங்கப்படவுள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அவ்வமைப்பானது ஆங்கிலக் கல்வி கற்பித்து, மேற்கத்திய வணிக முறைகள், கல்வி நெறிமுறைகளில் நிபுணர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்