கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் இளம் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆடவருக்கு 15 ஆண்டுச் சிறைத் தண்டனையும் பத்துப் பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அந்த ஆடவர், டிசம்பர் 3ஆம் தேதியும் அதற்கு முன்பு சில முறையும் அவரது எட்டு வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டது.
சாபாவின் ‘தொங்கொட்’ மாவட்டத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, 40 வயது தந்தை அவளைப் பாலியல் வன்கொடுமை செய்த ரகசியத்தை பள்ளிக்கூடப் பகிர்வு நேரத்தின்போது தெரிவித்தார்.
அது பற்றி தகவல் தெரிந்த தாயார் டிசம்பர் 6ஆம் தேதி காவல்துறையில் புகார் செய்தார். டிசம்பர் 7ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அந்த ஆடவர் அவரது வீட்டில் கைதுசெய்யப்பட்டார்.
டிசம்பர் 3ஆம் தேதி ‘தொங்கொட்’ மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் அந்தச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (டிசம்பர் 12) அவர் ஒப்புக்கொண்டார்.
சிறுமிக்குத் தற்போது சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கப்படுகின்றன.