ஜப்பான்: குரங்குப் பகுதிக்குள் நுழைந்த அமெரிக்கர்களுக்கு அபராதம்

ஜப்பான்: குரங்குப் பகுதிக்குள் நுழைந்த அமெரிக்கர்களுக்கு அபராதம்

1 mins read
ee498c5b-761d-4977-a86d-5acc14cc99d5
சமூக ஊடகங்கள்வழி பிரபலமானது ‘பஞ்ச்’ என்ற மெக்கேக் வகை குரங்கு. - படம்: ராய்ட்டர்ஸ்

சீபா: ஜப்பானின் இ‌ச்சிகாவா நகர விலங்கியல் தோட்டத்தில் குரங்குகள் இருந்த பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இருவருக்கு 300,000 யென், சிங்கப்பூர் மதிப்பில் $2,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள்வழி பிரபலமான ‘பஞ்ச்’ என்ற மெக்கேக் வகை குரங்கு இருந்த பகுதிக்குள் அவர்கள் நுழைந்தனர்.

சம்பவம் தொடர்பில் 24 வயது பல்கலைக்கழக மாணவரும் 27 வயது நிறுவன நிர்வாகியும் கைதுசெய்யப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை (ஜூன் 5) சீபா நீதிமன்றத்தில் அவர்கள்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

மே 17ஆம் தேதி அமெரிக்கர்களான இருவரும் குரங்குகளின் பகுதிகளுக்குள் அனுமதியின்றி சென்று விலங்கியல் தோட்டத்தின் செயல்பாட்டுக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தைக் கைதான இருவரும் ஜூன் 5ஆம் தேதியன்றே செலுத்தினர்.

குறிப்புச் சொற்கள்