பாண்டாக்கள் இல்லாத நாடாக மாறும் ஜப்பான்

1 mins read
41515a3e-aab5-4ef3-a823-2314f6e55903
மிகவும் பிரபலமான பாண்டாக்களைத் தொடர்ந்து வைத்திருக்க ஜப்பான் கோரியதாகவும் சீனா அதனை மறுத்துள்ளதாகவும் ‘நிக்கி அன்றாட வணிக’ நாளிதழ் கூறியது. - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: ஜப்பானியத் தலைநகரிலுள்ள விலங்கியல் தோட்டத்தின் பிரபலமான இரட்டைப் பாண்டாக்கள் ஜனவரி மாத இறுதியில் சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்துக்குப் பின் பாண்டாக்கள் இல்லாமல் போவது பொதுமக்களுக்கு ஏமாற்றமளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

சீனாவின் ‘பாண்டா அரசதந்திரத்’ திட்டத்தின் ஒரு பகுதியாகப் பாண்டாக்கள் கடனாகக் கொடுக்கப்பட்டிருந்தன. 1972ஆம் ஆண்டிலிருந்து இந்த வகைப் பாண்டாக்கள் பெய்ஜிங் - தோக்கியோ இடையிலான அரசதந்திர உறவின் அடையாளமாகத் திகழ்கின்றன.

சியாவ் சியாவ் எனும் ஆண் பாண்டாவும் அதன் சகோதரியான லெய் லெய்யும் 2021ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து 2025 வரை யுனோ (Ueno) விலங்கியல் தோட்டத்தில் வசிக்கின்றன. அடுத்த ஆண்டு (2026) ஜனவரி 25ஆம் தேதிதான் அவற்றைக் காணப் பொதுமக்களுக்குக் கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் மற்றொரு புதிய இணைப் பாண்டாக்களைக் கடனாகப் பெற முயல்வதாகவும் அவை திரும்பக் கொடுக்கப்படும் வரை அதற்குச் சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளதாகவும் ஊடகங்கள் பதிவு செய்துள்ளன.

விலங்கியல் தோட்டச் சூழலில் பாண்டாக்கள் இனப்பெருக்கம் செய்வது சிரமம் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
ஜப்பான்சீனாஅரசதந்திர உறவுகரடி