தோக்கியோ: ஜப்பான் நாட்டில் வயதான தம்பதிகள் இடையே நடக்கும் விவாகரத்துகள் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது.
2022ஆம் ஆண்டு தொடர்பான தரவுகளை அந்நாட்டு மக்கள் நல அமைச்சு வெளியிட்டது. அதில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
குறிப்பாக திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு மேலான தம்பதிகள் விவாகரத்து பெறும் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 38,991 தம்பதிகள் அந்தப் பிரிவை சேர்ந்தவர்கள்.
2022ஆம் ஆண்டில் ஜப்பானில் மொத்தம் 179,099 தம்பதிகள் விவாகரத்து பெற்றனர்.
ஏற்கெனவே மூப்படைந்த மக்கள்தொகை கொண்டுள்ள ஜப்பானுக்கு இது புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.

