இந்தியாவை அடுத்து நிலவில் கால்பதிக்கும் முனைப்பில் ஜப்பான்

இந்தியாவை அடுத்து நிலவில் கால்பதிக்கும் முனைப்பில் ஜப்பான்

1 mins read
b18ce4f9-eff6-4592-b9da-6b5a367653cf
நிலவுக்கு விண்கலம் அனுப்ப ஜப்பான் திட்டமிட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ரஷ்யா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக நிலவுக்கு விண்கலம் அனுப்ப ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இந்த வார இறுதியில் நிலவிற்கு விண்கலத்தை அனுப்ப அந்நாடு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி சில நாள்களே ஆகியுள்ள நிலையில், நிலவில் தன் ஆராய்ச்சியைத் தொடங்கும் அடுத்த நாடாக ஜப்பான் இருக்கும்.

ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம், சென்ற வாரம் நிலவின் மேற்பரப்பில் மோதி வெடித்துச் சிதறியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் விண்வெளி ஆய்வுக் கழகத்தால் (ஜக்ஸா) உருவாக்கப்பட்ட எச்2-ஏ உந்துகணை ஞாயிற்றுக்கிழமை காலை ஜப்பானின் தெற்குப் பகுதியில் உள்ள தனேகாஷிமா விண்வெளி நிலையத்திலிருந்து ஏவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அது குறைந்த எடைகொண்ட இறங்குகலத்தையும் நவீன படமெடுப்புச் செயற்கைக்கோளையும் தாங்கிச்செல்லும் எனக் கூறப்படுகிறது.

அது நிலவில் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்