தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவுக்கு எதிரான வாகனப் பாதுகாப்புத் தரநிலை: தளர்த்த ஜப்பான் திட்டம்

2 mins read
87af1845-eda1-4e72-998b-508d570fe784
ஜப்பான் தனது பொருளியல் ஆணிவேர் ஏற்றுமதியான வாகனங்களுக்கு எதிராக 25 விழுக்காடு வரியை அமெரிக்கா விதித்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ஜப்பான் இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கான பாதுகாப்பு தரநிலையை தளர்த்த திட்டமிட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகமான நிக்கே ஏஷியாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான், தான் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்கள் மீது அமெரிக்கா 24 விழுக்காடு வரிச்சுமையை ஏற்றியுள்ளது. எனினும், மற்ற நாடுகளைப் போலவே அதை 90 நாள்களுக்கு அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.

இது ஒருபுறமிருக்க அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா விதித்துள்ள 10 விழுக்காடு வரி ஜப்பானுக்கும் பொருந்தும். அத்துடன், கார்களுக்கு எதிராக தனியாக 25 விழுக்காடு வரியும் விதிக்கப்பட்டுள்ளது. கார் ஏற்றுமதி ஜப்பானியப் பொருளியலின் ஆணிவேர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கார்களுக்கான பாதுகாப்பு தரநிலைகள் அமெரிக்காவிலும் ஜப்பானிலும் மாறுபடுகின்றன. இதனால், பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுக்கு சலுகை வழங்கும் விதமாக கார் விபத்து பாதுகாப்பு பரிசோதனை தொடர்பான தரநிலைகளை தளர்த்த தான் தயாராக இருப்பதாக அமெரிக்காவுக்கு தெரிவிக்கப்படலாம் என்று நிக்கே ஊடகத் தகவல் கூறுகிறது.

உலகச் சந்தைகளை திரு டிரம்ப்பின் வரி விதிப்புக் கொள்கை புரட்டிப் போட்டுள்ளது. ஆகையால், பதிலுக்கு பதில் வரி என்ற திரு டிரம்ப்பின் கொள்கையையும் அவர் உலக நாடுகளுக்கு எதிராக விதித்திருக்கும் மற்றைய வரிகளையும் அமெரிக்காவை மீட்டுக் கொள்ள வைக்கும் முயற்சியில் மற்ற நாடுகளைப் போலவே ஜப்பானும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஜப்பானுடனான பேச்சுவார்த்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக திரு டிரம்ப் ஏப்ரல் 16ஆம் தேதி தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

திரு டிரம்ப்பின் வரி விதிப்பு தொடர்பாக முதன் முதலாக ஜப்பான் அமெரிக்காவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்க அதிபர் மேற்கண்டவாறு கூறியதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்