நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பிரதமர் பதவியைத் தக்கவைத்த இஷிபா

1 mins read
a859b62a-e86e-45e2-a0ff-0455f1c171c7
அனைத்துலக அரங்கில் பிரதமர் ஷிகேரு இஷிபாவுக்கு சில முக்கிய நிகழ்வுகளும் காத்திருக்கின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: ஜப்பானியப் பிரதமராக ஷிகேரு இஷிபா தொடர அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை (நவம்பர் 11) ஆதரவளித்தனர்.

முறைகேட்டால் களங்கம் அடைந்துள்ள அவரின் கூட்டணி, அக்டோபரில் நடந்த கீழவைத் தேர்தலில் நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்தது.

அக்டோபர் 1ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்ற பிறகு நாடாளுமன்றத்தில் திடீர் வாக்களிப்புக்கு அறைகூவல் விடுத்த திரு இஷிபா, வலுவற்ற சிறுபான்மை அரசாங்கத்தை இப்போது வழிநடத்த வேண்டும்.

465 இடங்களைக் கொண்ட கீழவையில் 221 இடங்களை வென்று எதிர்பார்த்தபடி அவர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டார்..

குறைந்த செல்வாக்கு உடைய மேலவைக்கும் 2025ல் தேர்தல் நடத்தப்படும். அதற்குள் திரு இஷிபா தமது அரசாங்கத்தின்மீது மக்களின் நம்பிக்கையைத் திரட்ட வேண்டும்.

அனைத்துலக அரங்கில் அவருக்காக சில முக்கிய நிகழ்வுகளும் காத்திருக்கின்றன. பிரேசிலில் நவம்பர் 18, 19ஆம் தேதிகளில் நடைபெறும் ஜி20 மாநாடும் அவற்றில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்