தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இழந்த ஆதரவை மீட்டெடுக்கும் முயற்சியில் கிஷிடா

1 mins read
93c9c2d5-9d31-498e-b327-381df9302266
ஆதரவு சரிந்துகொண்டே போனால் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் கட்சி உறுப்பினர்களே கட்சித் தலைவர் பொறுப்பில் உள்ள கிஷிடாவை மாற்றக்கூடும். - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: தமது ஆளுங்கட்சியின் நிதி விவகாரங்களைச் சீர்படுத்தும் முயற்சியாக ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா புதிதாக ஒரு பணிக்குழுவை அமைத்துள்ளார்.

கட்சிப் பிரிவுகள் ஏற்பாடு செய்த நிதித் திரட்டு நிகழ்ச்சிகளின் மூலம் திரட்டப்பட்ட தொகை குறித்து தெரியப்படுத்தத் தவறியதாக மிதவாத ஜனநாயகக் கட்சி (எல்டிபி) உறுப்பினர்கள் சிலர் மீது விசாரணை தொடங்கப்பட்ட நிலையில் கிஷிடாவின் அரசாங்கத்துக்கான ஆதரவு என்றும் இல்லாத அளவு சரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இழந்த ஆதரவை மீட்பதற்காக பிரதமர் கிஷிடா இம்முயற்சியில் இறங்கியுள்ளார்.

பணிக்குழு ஜனவரி 11ஆம் தேதியன்று அதன் முதல் சந்திப்புக் கூட்டத்தை நடத்தியது.

சட்டத்திலும் கட்சியின் உட்பிரிவுகள் நிர்வகிக்கப்படும் முறையிலும் செய்யக்கூடிய மாற்றங்கள் குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது.

பெரிதளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில், 1947ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பிரதமர் பதவியில் இருந்தவர்களில் திரு கிஷிடாவுக்குக் கிடைத்த மதிப்பீடே ஆக மோசம் என்று தெரியவந்தது.

இதற்கிடேய, 2025ஆம் ஆண்டு வரை பொதுத் தேர்தல் எதுவும் ஜப்பானில் நடைபெறாவிட்டாலும் ஆதரவு மேலும் சரிந்தால் எல்டிபி தலைவர் பொறுப்பில் உள்ள திரு கிஷிடாவை கட்சியினர் மாற்றக்கூடும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்