எண்ணெய் விநியோகத் தட்டுப்பாட்டால் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் நெருக்கடி: ஜப்பான்

எண்ணெய் விநியோகத் தட்டுப்பாட்டால் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் நெருக்கடி: ஜப்பான்

படம்: இபிஏ

04 May 2026 - 7:35 pm

1 mins read

கான்பெர்ரா: உலகளாவிய எண்ணெய் விநியோகத் தட்டுப்பாடு ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி திங்கட்கிழமை (மே 4) தெரிவித்தார்.

கான்பெராவில் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்த இரு நாடுகளும் அவசரமாகச் செயல்படும் என்று கூறினார்.

ஈரான் போரினால் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் ஆசிய நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிய நிலையில், மாற்று வழிகள், விநியோக உறுதித்தன்மை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

குறிப்புச் சொற்கள்
உலகம்ஜப்பான்ஈரான் போர்எண்ணெய்க் கப்பல்விநியோகம்தட்டுப்பாடு