தண்டனையைவிட மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் தரவுள்ள ஜப்பான்

தண்டனையைவிட மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் தரவுள்ள ஜப்பான்

1 mins read
d8b2ad06-f246-4e8b-b80a-66bcf832f84d
திருத்தப்பட்ட சட்டத்தின்படி குற்றவாளிகள் சிறையில் பணி செய்வது கட்டாயமன்று என ஜப்பான் நீதி அமைச்சு சொன்னது. - படம்: பிக்சாபே

தோக்கியோ: சிறைச்சாலைகளில் குற்றவாளிகளின் மறுவாழ்வுக்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தண்டனைச் சட்டத்தை ஜப்பான் அரசாங்கம் திருத்தியது.

திருத்தப்பட்ட சட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம், ஜப்பானில் நூறாண்டுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த குற்றச்சட்டங்களின்கீழ் வழங்கப்பட்ட தண்டனையில் முதல்முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், “குற்றவாளிகள் சிறையில் பணி செய்வது கட்டாயமன்று. மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடாத வகையில் அவர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான வழிகாட்டுதலை வழங்குதல், கல்விக்குக் கூடுதல் நேரம் செலவிடுவது போன்றவற்றில் சிறைத்துறை கவனம் செலுத்தும்,” என ஜப்பான் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூன் 1ஆம் தேதிக்குப் பிறகு தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகளுக்கு மட்டுமே திருத்தப்பட்ட சட்டம் பொருந்தும்.

குறிப்புச் சொற்கள்