தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பானின் ஆக வெப்பமான செப்டம்பர் மாதம்

1 mins read
76db4b49-1377-43c4-8ead-4814219e9843
தோக்கியோவில் வெப்பமானதொரு நாளில் நீர் தெளிப்பு அமைப்பின் ஊடாக நடந்து தன்னைக் குளிர்வித்துக்கொள்ளும் பாதுகாவலர். - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானில் கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இவ்வாண்டு செப்டம்பர் மாதம் ஆக வெப்பமானதாக இருந்தது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் வெப்பநிலை ஜப்பானைச் சுட்டெரித்த வெயில், வழக்கமாகப் பதிவாகும் சராசரி வெப்பநிலையை விட 2.66 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது என அந்நிலையம் திங்கட்கிழமை தெரிவித்தது.

அந்நாடு 1898ஆம் ஆண்டு முதல் வானிலை குறித்த தரவுகளைப் பதிவுசெய்து வருகிறது. அதிலிருந்து பார்க்கையில், 2023 செப்டம்பர் மாதத்தில்தான் ஆக அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று புள்ளிவிவரங்கள் காட்டுவதாக அந்நிலையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த வெப்பநிலை இயல்பிற்கு மாறானது என்றும் இது முந்திய அதிகபட்ச வெப்பநிலையை விஞ்சிவிட்டது என்றும் வானிலை நிலைய அதிகாரி மசயுகி ஹிராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

“இந்த வெயில் அசாதாரணமானது இல்லை என்றால், அது வேறு என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை,” என அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்