நிலநடுக்க எச்சரிக்கையை மீட்டுக்கொண்ட ஜப்பான்

நிலநடுக்க எச்சரிக்கையை மீட்டுக்கொண்ட ஜப்பான்

1 mins read
bbde6437-d77c-454a-a55e-68422055299d
ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாகப் பல வீடுகள் சேதமடைந்தன. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

தோக்கியோ: ஜப்பானின் தென்மேற்குத் தீவான குயுஷுவில் கடந்த வாரம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

ஜப்பானின் நிலநடுக்கம் தொடர்பாக எச்சரிக்கை அறிக்கை வெளியிடப்பட்டது அதுவே முதல்முறை.

எச்சரிக்கை அறிக்கை வெளியிடப்பட்டதும் ஜப்பானுக்குச் செல்ல இருந்த ஆயிரக்கணக்கான சுற்றுப்பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை ரத்து செய்தனர்.

இதனால் அந்நாட்டில் சுற்றுப்பயணத்துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், நிலநடுக்கம் தொடர்பான எச்சரிகையை ஜப்பான் வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 15) மீட்டுக்கொண்டது.

“இனி ஜப்பானிய மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம்,” என்று அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைச்சர் யோஷிஃபுமி மட்சுமுரா தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்