ஜப்பானின் தொக்காச்சி எரிமலை; எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டது

ஜப்பானின் தொக்காச்சி எரிமலை; எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டது

1 mins read
64b6069d-346d-4d37-a011-c1fc9045b1f3
தொக்காச்சி எரிமலை. - படம்: குளோபல் ரைட்

சப்போரா: ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் தொக்காச்சி எரிமலை குமுறக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஐந்து நிலை எச்சரிக்கை கட்டமைப்பில் அதற்கான எச்சரிக்கை நிலை மூன்றாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் அந்த மலைக்குப் போகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வட்டார வானிலை அதிகாரிகள் சனிக்கிழமை (செப்டம்பர் 12) இத்தகவல்களை வெளியிட்டனர்.

இரண்டாக இருந்த எச்சரிக்கை நிலை இப்போது மூன்றுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2,077 மீட்டர் உயரம்கொண்ட தொக்காச்சி மலையின் கிரேட்டர் (crater) பகுதிக்குச் செல்ல அனுமதி கிடையாது.

எரிமலை எந்நேரமும் குமுறக்கூடும் என்றும் கிரேட்டரின் மூன்று கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகள் பாதிக்கப்படலாம் என்றும் ஜப்பானிய வானிலை அமைப்பின் சப்போரோ வட்டாரத் தலைமையகம் எச்சரிக்கை விடுத்தது.

கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து அந்த எரிமலைக்கு அருகே உள்ள பகுதிகளை உலுக்கும் கடும் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். எரிமலை சாம்பல், சிறிய எரிமலைக் கற்கள் ஆகியவை வெளியே வீசி எறியப்படக்கூடும் என்று அவர்கள் ஃபிரானோ, பியெய் காமிஃபுரோனோ, மினாமிஃபுரோனோ, ‌ஷின்டோக்கு ஆகிய பகுதிகளில் வசிப்போரை எச்சரித்தனர்.

குறிப்புச் சொற்கள்