ஜப்பானின் ‘யாக்குஸா’ உறுப்பினர் எண்ணிக்கை வரலாறு காணாத சரிவு

1 mins read
cbca9924-c076-4499-b74e-34327e72758b
ஜப்பானில் உள்ள பொது இடம் ஒன்று. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஜப்பானின் ‘யாக்குஸா’ (yakuza) குற்றக் கும்பலில் சேர்ந்துள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளது.

கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்தே ‘யாக்குஸா’ குழுக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

சென்ற ஆண்டு ‘யாக்குஸா’வில் 18,800 உறுப்பினர்கள் இருந்தனர். முதன்முறையாக இந்த எண்ணிக்கை 20,000க்குக் குறைவாகப் பதிவாகியிருப்பது வியாழக்கிழமை (ஏப்ரல் 3) வெளியான காவல்துறைப் புள்ளிவிவரங்களில் தெரியவந்தது.

இருந்தாலும் ‘யாக்குஸா’ கும்பலின் நடவடிக்கைகள் மேலும் மறைமுகமாக நடந்து வருவதாக ஜப்பானின் தேசிய காவல்துறை அமைப்பு வியாழக்கிழமையன்று அறிக்கை மூலம் எச்சரித்தது. அக்கும்பலுக்கு மேலும் பலதரப்பட்ட தரப்புகளிலிருந்து நிதி சேர்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

“நமது சமூகத்துக்கு ‘யாக்குஸா’ மிரட்டலாக இருக்கிறது என்பதில் மாற்றம் இல்லை,” என்று காவல்துறை எடுத்துரைத்தது.

அந்தக் கும்பலின் உறுப்பினர் சேர்க்கை தொடர்பிலான புள்ளிவிவரங்களைக் காவல்துறை எவ்வாறு சேகரித்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்