'கொலையாளிக்கு உயிரை மாய்த்துக்கொள்வதில் தோல்வி'

1 mins read
d250349c-6650-418a-b425-0753c7056dac
படம்: பிக்சாபே -

மலேசியாவில் தனது காதலியைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஓர் ஆடவர் அதற்குப் பிறகு தனது உயிரையும் மாய்த்துக்கொள்ள முயன்றிருக்கிறார். எனினும், அந்த முயற்சியில் அவர் தோல்விகண்டார்.

ஆடவர் ரயில் தண்டவாளத்தில் படுத்திருக்கிறார். ஆனால், தவறான தண்டவாளத்தில் படுத்த்ததால் அவரின் கண்முன் ரயில் சென்றது.

துணைக் காவல்துறையினர் அவரைக் கைதுசெய்தனர்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே இச்சம்பவம் நிகழ்ந்தது. விரைவு ரயில் பாதையில் சலாக் சிலாட்டான் நிலையத்துக்கு அருகே ஆடவர் பிடிபட்டார். இம்மாதம் மூன்றாம் தேதியன்று இச்சம்பவம் நிகழ்ந்தது.

"சந்தேக நபர் செராஸ் பகுதியின் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். கூட்டுரிமை வீடு ஒன்றில் தனது காதலியைக் கொன்றதாக அவர் காவல்துறை விசாரணையின்போது தெரிவித்தார்," என்று பெட்டாலிங் ஜெயா காவல்துறைத் தலைவர் முகம்மது ஃபக்ருதீன் அப்துல் ஹமீது செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தின் கெலானா ஜெயா பேட்டையில் உள்ள கூட்டுரிமை வீட்டுக்கு ஆடவர் காவல்துறையினரை அழைத்துச் சென்றார். அங்கு நினைவிழந்த நிலையில் காதலி ரத்தக் காயங்களுடன் படுத்துக்கிடந்தார். அவருக்கு அருகே கத்தி ஒன்றும் இருந்தது.

குறிப்புச் சொற்கள்