பிரான்சில் $1.6 மில்லியன் பெறுமான நகை திருட்டு

1 mins read
a2e90184-d67d-49a3-94ec-54476101e681
பிரான்சின் லீல் நகருக்கு அருகே மத்திய ரூபேயெக்ஸ் வட்டாரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையர்கள் நகைகளைக் களவாடிச் சென்றதாகக் கூறப்பட்டது. - படம்: பிக்சாபே

லீல், பிரான்ஸ்: பிரான்சின் வட பகுதியில் கொள்ளையர்கள் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர் ($1.6 மில்லியன்) பெறுமான நகைகளைக் களவாடிச் சென்றதாகக் காவல்துறை சனிக்கிழமை (நவம்பர் 15) தெரிவித்துள்ளது.

லீல் நகருக்கு அருகே மத்திய ரூபேயெக்ஸ் வட்டாரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் புதன்கிழமை (நவம்பர் 12) கொள்ளையர்கள் நகைகளைத் திருடிச் சென்றதாகக் கூறப்பட்டது. சிறிது நேரம் நகைக்கடைக்காரரையும் அவரது மனைவியையும் பிணை பிடித்து வைத்திருந்த அவர்கள், பின்னர் நகைகளோடு ஓடிவிட்டனர்.

திருடுபோன நகைகளின் மதிப்பு 500,000 பவுண்டுக்கும் ($754,000) 1 மில்லியன் பவுண்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று காவல்துறை தெரிவித்தது.

ஆள்கடத்தல், திட்டமிட்ட சதி, ஆயுதமேந்தி மிரட்டிப் பணம் பறித்தல் முதலிய குற்றங்களின் தொடர்பில் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

மற்றொரு சம்பவத்தில், புதன்கிழமை காலையில் மர்ம நபர்கள் சிலர், ரூபேயெக்ஸ் வட்டாரத்தின் முக்கிய அஞ்சல் நிலையத்திற்குச் சொந்தமான ரொக்க மாற்றுப் பெட்டகத்தைத் தகர்த்தனர். அவர்கள் அதிலிருந்த பையைக் களவாடிச் சென்றனர்.

அந்தப் பைக்குள் வேறு சில காலிப் பைகள் மட்டுமே இருந்தது பின்னர் தெரியவந்தது. அன்று மாலை ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

சென்ற மாதம் (அக்டோபர் 2025) தலைநகர் பாரிசில் உள்ள லூவர் அரும்பொருளகத்திலிருந்து கொள்ளையர்கள் பட்டப்பகலில் $102 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமான நகைகளைக் களவாடியதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்