தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

1எம்டிபி மோசடியுடன் தொடர்புடைய வார்ஹால், மோனெட் கலைப்படைப்புகளை அமெரிக்க நீதித்துறை திரும்ப பெறும்

2 mins read
8362ce75-e3b3-4a72-8b2e-a358edb7ad9c
மலேசிய செல்வந்தர் ஜோ லோ. - படம்: தி ஸ்டார்

வாஷிங்டன்: மலேசிய செல்வந்தர் ஜோ லோ சம்பந்தப்பட்ட 1எம்டிபி மோசடி வழக்கில் தொடர்புடைய கிளோட் மோனெட், ஆண்டி வார்ஹால் இருவரின் கலைப்படைப்புகள் மூலம் 100 மில்லியன் அமெரிக்க டாலர் (S$135.8 மில்லியன்) மதிப்புள்ள சொத்துகளை திரும்ப பெறும் முயற்சியில் அமெரிக்க நீதித் துறை வெற்றி பெற்றுள்ளது.

இரண்டு சிவில் பறிமுதல் வழக்குகளைத் தீர்ப்பதற்காக, தலைமறைவாகியுள்ள மலேசியத் தொழிலதிபர் ஜோ லோ, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது நம்பிக்கைக்குரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதை அமெரிக்க நீதித் துறை அறிவித்தது.

1எம்டிபி என்ற சிக்கலான இறையாண்மை முதலீட்டு நிதியில் இருந்து மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிதியைப் பயன்படுத்தி லோ மற்றும் அவரது குடும்பத்தினர் கையகப்படுத்தியதாகக் கூறும் சொத்துகளுக்கு எதிரான வழக்குகளை அமெரிக்க நீதித் துறை முன்பு தாக்கல் செய்தது.

1எம்டிபி நிதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள ஹாங்காங், சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள வேறு சில சொத்துகளை மலேசியாவிற்கு மாற்றுவதில் ஒத்துழைக்க லோ ஒப்புக்கொண்டார்.

“இந்த ஒப்பந்தம் பாரிஸில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு, சுவிட்சர்லாந்தில் உள்ள ஆண்டி வார்ஹால், கிளோட் மோனெட் ஆகியோரின் கலைப்படைப்புகளுக்கு எதிரான சிவில் பறிமுதல் நடவடிக்கையைத் தீர்க்கிறது. இவற்றை லோ மொத்தம் சுமார் 35 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார்,” என்று அமெரிக்க நீதித் துறை வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

மேலும், ஹாங்காங், சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் ஆகியவற்றில் உள்ள சுமார் 67 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வங்கிக் கணக்குகளில் உள்ள உண்மையான சொத்து மற்றும் பணத்தை மலேசியாவுக்குத் திரும்பக் கொடுக்க சம்பந்தப்பட்ட தரப்புகள் ஒப்புக்கொண்டன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக புளூம்பர்க் செய்தி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
ஒப்பந்தம்பறிமுதல்ஜோ லோ