கோலாலம்பூர்: மலேசியாவில் 1எம்டிபி (1MDB) நிதி மோசடியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த செய்தியாளர்கள் தற்போது தலைமறைவாக வாழ்ந்து வரும் ஜோ லோ குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
1எம்டிபி நிதி மோசடியில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஜோ லோ, ஷாங்காயில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் போலியான அடையாளத்தைக் கொண்டு வாழ்ந்து வருவதாக அச்செய்தியாளர்கள் கூறினர்.
ஜோ லோ, ஷாங்காயின் கீரின் ஹில்ஸ் பகுதியில் வாழ்ந்து வருவதாகவும் அவர் ஆஸ்திரேலியக் கடப்பிதழைப் பயன்படுத்தி அங்குத் தங்கியுள்ளார் என்று செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
தற்போது ஜோ லோ, கான்ஸ்டான்டினோஸ் அக்கிலிஸ் வெய்ஸ் என்னும் கிரேக்கப் பெயர் வைத்துள்ளார் என்றும் அவர்கள் கூறினர்.
மலேசிய அரசாங்கத்தின் 1எம்டிபி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 5.8 பில்லியன் வெள்ளி நிதியைத் தவறுதலாகப் பயன்படுத்தியதாக ஜோ லோவை 2018ஆம் ஆண்டு முதல் மலேசியாவும் அமெரிக்காவும் தேடி வருகிறது.