அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கு 100 வயது

1 mins read
d9da8765-b4d1-48e7-842a-2616c1f1c6a7
திரு ஜிம்மி கார்ட்டர் அமெரிக்காவின் 39வது அதிபராக 1977ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதியிலிருந்து 1981ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரை பதவி வகித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜார்ஜியா: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கு அக்டோபர் 1ஆம் தேதி பிறந்தநாள்.

அவருக்கு 100 வயதாகிவிட்டது.

100 வயதை எட்டிய முதல் அமெரிக்க அதிபர் எனும் பெருமை ஜிம்மி கார்ட்டரைச் சேரும்.

திரு கார்ட்டரின் சொந்த ஊர், ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள பிளேன்ஸ் நகரமாகும்.

அவரது 100வது பிறந்தநாளைக் கொண்டாட அந்த நகரம் மிகுந்த ஆவலுடன் உள்ளது.

அந்திமகாலப் பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்கப்படுவதாக திரு கார்ட்டர் அறிவித்து 19 மாதங்களுக்கும் மேலாகிவிட்டது.

திரு கார்ட்டர் அமெரிக்காவின் 39வது அதிபராக 1977ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதியிலிருந்து 1981ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரை பதவி வகித்தார்.

குறிப்புச் சொற்கள்