தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க அதிபரின் வயது குறித்து நாட்டு மக்கள் கவலை

1 mins read
6710017e-54e0-4629-820e-fdbabfa8becf
வெர்ஜினியாவில் அதிபர் ஜோ பைடன் இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்கிறார். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு திங்கட்கிழமை 81 வயது பூர்த்தியாகிறது.

அமெரிக்க வரலாற்றிலேயே வயதில் ஆக முதிய அதிபர் அவர். அடுத்த ஆண்டு தேர்தலில் இரண்டாம் தவணைக்காலத்திற்குப் போட்டியிட்டு அதில் வெற்றிபெற்றால் பதவி விலகும்போது அவருக்கு வயது 86ஆக இருக்கும்.

இதன் தொடர்பில் திரு பைடன் சில நேரங்களில் நகைச்சுவையாகப் பேசுவார் என்றாலும், அவரது வயது குறித்து அமெரிக்க வாக்காளர்கள் அதிக கவலை கொள்வதாகக் கருத்தாய்வுகள் காட்டுகின்றன.

‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானப் படிக்கட்டுகளில் நிலை தடுமாறியது, செய்தியாளர் கூட்டங்களில் அவ்வப்போது தொடர்பற்ற பதில்களைக் கொடுத்தது போன்றவை அதற்குக் காரணம்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல் டிரம்ப் சில தவறுகள் செய்திருந்தாலும் 77 வயதாகும் அவரைப் பொறுத்தவரை வாக்காளர்கள் இடையே அத்தகைய கவலை எழவில்லை என்று கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு தேர்தலில் திரு பைடன், திரு டிரம்புக்கு எதிராகப் போட்டியிட சாத்தியம் உள்ளது.

குறிப்புச் சொற்கள்