ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு $9 பில்லியன் இழப்பீடு தருகிறது

வடஅமெரிக்காவில் தமது பொருள்கள்மீது வழக்கு தொடுத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 9 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு தர ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் முன்வந்துள்ளது.

குழந்தைகளுக்கான மற்றும் பிற நறுமணப்பொடிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் இருப்பதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின்மீது வாடிக்கையாளர்கள் வழக்கு தொடுத்தனர். 

வாடிக்கையாளர்களிடம் சமரசமாகப் போக அந்நிறுவனம் தற்போது 9 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் அது 7 பில்லியன் டாலர் தருவதாகத் தெரிவித்திருந்தது.

நிறுவனத்தின்மீது 40,000க்கும் அதிகமானவர்கள் வழக்கு தொடுத்துள்ளனர். 

இழப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது தங்களுக்கு ஆறுதல் தரும் செய்தியாக இருப்பதாக வழக்கு தொடுத்தவர்கள் தெரிவித்தனர். 

2020ஆம் ஆண்டு முதல் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அமெரிக்காவில் விற்பனையை நிறுத்தியது. கடந்த ஆண்டு உலக அளவில் அதன் நறுமணத்தூள் நிறுத்தியது.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ஏறக்குறைய 130 ஆண்டுகளாக நறுமணத்தூள் விற்று பெரும் லாபத்தை ஈட்டி வந்தது.  

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!