தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சோதனைச் சாவடிகளில் 250 அதிகாரிகளைப் பணியமர்த்தும் ஜோகூர்

1 mins read
நெரிசலைக் குறைக்க குறுகியகால தீர்வுகளில் இதுவும் ஒன்று
03913610-e721-47fb-91ee-c5d4ee175600
வரும் செப்டம்பர் மாத்திற்குள் அந்த 250 அதிகாரிகள் பணியமர்த்தப்படுவர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மலேசியாவின் தெற்கு மாநிலமான ஜோகூரில் சிங்கப்பூருடான எல்லைகளில் பணியாற்றுவதற்காக கூடுதலாக 250 குடிநுழைவு அதிகாரிகள் சேர்க்கப்படவிருக்கின்றனர்.

வரும் செப்டம்பர் மாத்திற்குள் அந்த 250 அதிகாரிகள் பணியமர்த்தப்படுவர்.

வியாழக்கிழமை (ஜூன் 15) சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய ஜோகூர் முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி இதனை அறிவித்தார்.

கூடுதலாக 100 அதிகாரிகள் எல்லைப் பணிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என கடந்த மே மாதம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மேலும் 250 குடிநுழைவு அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிஐகியூ மற்றும் இஸ்கந்தர் புத்தேரியில் உள்ள சோதனைச் சாவடிகளில் நெரிசலைக் குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு ஜோகூர் முதல்வர் பதிலளித்தார்.

ஜோகூர் மேம்பாலத்திலும் இரண்டாவது பாலத்திலும் நெரிசலைக் குறைக்க கூடுதலாக அதிகாரிகளை பணியமர்த்துவது குறுகியகால நடவடிக்கைகளில் ஒன்று என்று முதல்வர் ஓன் ஹஃபிஸ் கூறினார்.