ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாரு நகரில் உள்ள சொகுசுக் கூட்டுரிமை வீடுகளிலிருந்து செயல்பட்டு வந்த மின்நாணய மோசடிக் கும்பல் ஒன்றை காவல்துறையினர் முறியடித்துள்ளனர்.
சில நாள்களுக்கு முன்பு, இஸ்கந்தர் புத்ரி வட்டாரத்தில் நான்கு சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் தங்கிய கூட்டுரிமை வீட்டில் மலேசிய வர்த்தகக் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.
கைது செய்யப்பட்டோர் 32 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
சந்தேக நபர்களிடம் கடப்பிதழ்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அவர்களிடமிருந்து கைப்பேசிகள், மடிக்கணினிகள் போன்ற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன்பு, ஜோகூர் பாருவில் உள்ள இரண்டு உயர்தர சொகுசு கூட்டுரிமை வீடுகளில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
வெளிநாடுகளைச் சேர்ந்த பத்து பேர் பிடிபட்டனர்.
அவர்களில் ஐந்து சீன நாட்டவர்கள், மியன்மாரைச் சேர்ந்த மூவர், இரண்டு இந்தோனீசியர்கள் ஆகியோர் அடங்குவர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

