சிங்கப்பூரிலிருந்து அதிக மக்களை எதிர்பார்க்கும் ஜோகூர் வணிகர்கள்

2 mins read
7425ca7a-62ca-43c4-b0e8-dc83e3131b93
வழக்கம்போல இவ்வாண்டு இறுதியிலும் சிங்கப்பூரிலிருந்து மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என ஜோகூர் வியாபாரிகள் நம்புகின்றனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு: 2025ஆம் ஆண்டின் விடுமுறைக் காலம் நெருங்கிவிட்டது.

இந்நிலையில் ஆண்டின் கடைசி இரு வாரங்களில் அதிகமான மக்கள் சிங்கப்பூரிலிருந்து வருவார்கள் என ஜோகூர் வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஜோகூர் வர்த்தகர்களைப் பொறுத்தவரை சிங்கப்பூரிலிருந்து கடைகளுக்கு வரும் கூட்டம் இன்னமும் அதிகரிக்கவில்லை.

ஆண்டு இறுதியில் உள்ளூர் வியாபாரம் சூடுபிடிப்பது வழக்கம். அந்த வகையில் 2025ஆம் ஆண்டின் இறுதியிலும் மக்கள் கூட்டம் குறையாது என்று கடைக்காரர்கள் நம்புகின்றனர்.

ஜோகூர் பாரு சிறிய வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் டே டியான் ஹுவாங், இவ்வார இறுதியில் சிங்கப்பூரிலிருந்து அதிகமானவர்கள் வருவார்கள் எனத் தாம் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

“ஜோகூர் பாலத்தைக் கடந்து வருபவர்களின் எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கவில்லை. இதற்கு மழையும் வானிலையும் ஒரு காரணமாக இருக்கலாம்,” என்றார்.

அதே சமயத்தில் வலுவான ரிங்கிட்டின் மதிப்பு சில தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும் என்று அவர் சொன்னார்.

“வானிலையோ அல்லது நாணய பரிமாற்றமோ, எதுவாக இருந்தாலும் குறிப்பாக இந்த நேரத்தில் கடைகளுக்கு செல்வதும், விடுமுறைக்கும் சிங்கப்பூர் பழகிவிட்டதால் விரைவில் அதிக மக்கள் கூட்டத்தை காண வாய்ப்புள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார். ஜோகூர் பாரு சந்தை வளர்ச்சி மற்றும் நலச் சங்கத் தலைவர் ஃபுவாட் ரஹ்மத் இதேபோன்ற கருத்தை எதிரொலிக்கிறார்.

“மழைப்பொழிவு இங்கு வணிகத்தை குறைத்துள்ளது, ஆனால் அது தெளிந்தவுடன், அதிக கூட்டத்தைக் காண முடியும்,” என்று அவர் கூறினார். வெள்ளம் மற்றும் அதிக போக்குவரத்து குறித்த கவலைகள் வருகையாளர்களின் எண்ணிக்கையை பாதிக்கின்றன என்று ஜோகூர் இந்திய முஸ்லிம் தொழில் முனைவோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹுசைன் இப்ராஹிம் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்