தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர் எண்ணெய் கடைத் தீ: நச்சுவாயு அறிகுறி இல்லை

2 mins read
321ee226-09ef-43bc-a485-0e70f7716331
சம்பவம் மாசாய் நகரில் நிகழ்ந்தது. - படம்: பெர்னாமா / thesun.my
multi-img1 of 2

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள மாசாய் நகரில் லாரி, வாகன இயந்திரங்களுக்கான எண்ணெய்யை விற்கும் கடையில் தீ மூண்டதைத் தொடர்ந்து அதன் சுற்று வட்டாரத்தில் அமோனியா வாயு வெளியேற்றம் தொடர்பான அறிகுறி ஏதும் இல்லை என்று ஜோகூர் சுற்றுச்சூழல் பிரிவு (டிஓஇ) தெரிவித்துள்ளது.

கடையின் ஒரு பகுதி அழிந்துபோனதாகவும் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறியதாக மலேசிய ஊடகங்கள் குறிப்பிட்டன.

மாசாய் நகரின் தாமான் கோத்தா புத்திரி பகுதியில் ஜாலான் சென்டெராய் 27ல் தீ மூண்டது. அதனைத் தொடர்ந்து தீக் கட்டுப்பாட்டுப் பகுதி (fire control post) உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் நச்சுவாயு வெளியேற்றம் தொடர்பான அறிகுறி ஏதும் இல்லை என்று டிஓஇ இயக்குநர் முகம்மது ஃபாமி யூசோஃப் குறிப்பிட்டார். தீக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 21) இரவு அபாயமற்ற அமோனியா வெளியேற்றம் இருப்பது அடையாளம் காணப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) காலை அமோனியா வெளியேற்றம் குறித்து ஆராய சோதனைகள் தொடங்கின.

“தீ மூண்ட இடத்தைச் சுற்றியுள்ள ஐந்து இடங்களிலும் நச்சுவாயு அல்லது விஓசி (VOC) வகை ரசாயனம் வெளியேறுவதற்கான அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை,” என்று திரு முகம்மது ஃபாமி யூசோஃப் ஞாயிற்றுக்கிழமை அறிக்கையில் தெரிவித்தார்.

தீயினால் மொத்தம் சுமார் 1,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஐந்து இடங்கள் எரிந்துபோயின. 15 வாகனங்களும் அழிந்துபோயின.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நான்கு மணிக்குள் தீயணைப்பு நடவடிக்கைகள் சில நிறைவடைந்ததாக ஜோகூர் தீயணைப்பு, மீட்புக் பிரிவின் ஸோன் ஒன்றின் தலைவர் ஸைப்புல்பஹ்ரி மட் ருசோக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், சவால்கள் காரணமாக மேலும் சில பணிகள் தொடர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இச்சம்பவம் குறித்து சனிக்கிழமை பிற்பகல் 12.54 மணிக்குத் தீயணைப்பு, மீட்புப் பிரிவின் (ஜேபிபிஎம்) செயல்பாட்டு நிலையத்துக்கு அவசர அழைப்பு வந்தது. தொண்டூழியர்கள் உட்பட வெவ்வேறு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த பணியாளர்கள் பலர் பணியில் ஈடுபடுத்தப்பட்டதோடு பல கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

குறிப்புச் சொற்கள்