தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டினர் வாங்கும் சொத்துகளுக்கான தீர்வையை உயர்த்த ஜோகூர் பரிந்துரை

1 mins read
c39b3c8f-f539-4fc6-93ba-d807f55f49b1
தீர்வையை உயர்த்துவதன் மூலம் நிலம் தொடர்பான ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மையையும் துரிதமான செயல்பாட்டையும் மேம்படுத்த ஜோகூர் இலக்கு கொண்டுள்ளது. - படம்: தி பிஸ்னஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் வெளிநாட்டினர் வாங்கும் சொத்துகளுக்கான ஒப்புதல் தீர்வையை இரண்டு விழுக்காட்டிலிருந்து மூன்று விழுக்காடாக உயர்த்த அம்மாநிலம் பரிந்துரைத்துள்ளது.

நில நிர்வாகத்தை வலுப்படுத்தவும் ஏற்கெனவே நடப்பில் இருக்கும் முறைக்குத் தேவையான ஆதரவை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவும் என்று ஜோகூர் மாநிலத்தின் முதல்வர் ஓன் ஹஃபிஸ் கஸி தெரிவித்தார்.

இத்தீர்வை 2014ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தீர்வையை உயர்த்த முதல்முறையாகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தீர்வையை உயர்த்துவதன் மூலம் நிலம் தொடர்பான ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மையையும் துரிதமான செயல்பாட்டையும் மேம்படுத்த ஜோகூர் இலக்கு கொண்டுள்ளது.

“ஒப்புதல் தீர்வையை இரண்டு விழுக்காட்டிலிருந்து (குறைந்தபட்சம் 20,000 ரிங்கிட்) மூன்று விழுக்காடாக (குறைந்தது 30,000 ரிங்கிட்) உயர்த்துவது தொடர்பாக ஜோகூர் பரிந்துரை செய்து வருகிறது.

“செயலாக்கம் தொடர்பான செலவுகளை ஆதரிக்கவும் பொதுமக்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் வழங்கப்படும் மேம்படுத்தப்பட்ட சேவையைப் பிரதிபலிக்கவும் இந்த மாற்றங்கள் அவசியம்,” என்று புதன்கிழமையன்று (ஜூன் 18) திரு ஓன் ஹஃபிஸ் பேஸ்புக்கில் பதிவிட்டார்.

500,000 ரிங்கிட்டுக்கும் அதிக விலையுள்ள சொத்துகளின் நில உரிமையாளர் பத்திரத்தில் உரிமையாளரின் பெயரை மாற்றுவதற்தான கட்டணத் தொகையை மாற்றுவதும் பரிந்துரையில் அடங்கும் என்று அவர் கூறினார்.

பரிந்துரையின்கீழ் சொத்து விலை அதிகரிப்பில் ஒவ்வொரு 100,000 ரிங்கிட்டுக்கும் கூடுதலாக 500 ரிங்கிட் வசூலிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்