தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டார உடன்பாடு ஒத்திவைப்பு

1 mins read
74665bd2-4b18-4e25-8b76-21af89a572f8
இவ்வாண்டு ஜூன் 12ஆம் தேதி புத்ராஜெயாவில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிமும் சந்தித்துப் பேசினர். - கோப்புப் படம்

ஜோகூர், சிங்கப்பூர் இடையிலான சிறப்புப் பொருளியல் வட்டார ஒப்பந்தம் கையெழுத்திடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் லாரன்ஸ் வோங், கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதே அதற்குக் காரணம்.

முன்னதாக டிசம்பர் 9ஆம் தேதி வருடாந்தர தலைவர்கள் சந்திப்பின்போது அந்த ஒப்பந்தம் கையெழுத்திடுவதாக இருந்தது. ஆனால் ஜனவரிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பிரதமர் லாரன்ஸ் வோங்குக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மலேசிய செனட் சபையில் பேசிய திரு அன்வார், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்திடுவது டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் செவ்வாய்க்கிழமை இரவு சிங்கப்பூர் பிரதமர் தனக்கு கொவிட்-19 இருப்பதாகவும் ஒப்பந்தம் கையெழுத்திடுவதை ஜனவரிக்கு ஒத்தி வைக்கலாம் என்றும் தன்னிடம் கூறியதாக சொன்னார்.

“இது, என்னிடம் உள்ள அண்மைய தகவல், அவர் என்னை அல்லது என் மனைவி அஸிஸாவை தொற்றால் பாதிக்க விரும்பவில்லை என்று என்னிடம் கூறினார்,” என்றார் அவர். மலேசியாவின் நிர்வாகத் தலைநகரான புத்ராஜெயாவில் டிசம்பர் 8 முதல் டிசம்பர் 9 வரை சிங்கப்பூர்-மலேசியா தலைவர்களின் வருடாந்தர சந்திப்பில் சந்திக்கவிருந்தனர். கடந்த செவ்வாயன்று (டிசம்பர் 3) ஃபேஸ்புக் பதிவு ஒன்றில், முதல் முறையாக தனக்கு COVID-19 இருப்பது சோதனை மூலம் தெரிய வந்துள்ளதாக பிரதமர் வோங் கூறியிருந்தார்.

தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டில் இருந்து வேலை செய்யப் போவதாகவும் திரு வோங் அப்பதிவில் தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்