ஜோகூர் மாநிலத் தேர்தல்; ம.இ.கா. நான்கு தொகுதிகளில் போட்டி

ஜோகூர் மாநிலத் தேர்தல்; ம.இ.கா. நான்கு தொகுதிகளில் போட்டி

1 mins read
013a6c9b-56cc-44cd-84dd-3dd39796ebc6
மலேசிய இந்தியக் காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ விக்னேஸ்வரன். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிட மலேசிய இந்தியக் காங்கிரசுக்கு (மஇகா) நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அண்மையில், தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளுடன் ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களின் தேர்தல்கள் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட மஇகா தலைவர் எஸ்.ஏ விக்னேஸ்வரன், இந்தத் தகவலை உறுதிப்படுத்தியதாக உதவித் தலைவர் டி.முருகையா கூறினார். 

மத்திய அரசாங்கத்தை வலுப்படுத்தவும் சீரமைக்கவும் ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தொகுதிகள் அனைத்திலும் உள்ள இந்திய மக்களிடம் பிரசாரம் செய்யும்போது துல்லியமான தகவல்களை வழங்க ஏதுவாக, இவ்வார இறுதியில் ஜோகூர் பாருவில் சுமார் 150 பேருக்கு இரண்டு நாள் பயிற்சி ஒன்றை மஇகா ஏற்பாடு செய்யும் என்று முருகையா கூறினார்.

கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 15வது ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிட்ட நான்கு தொகுதிகளில் கெமெலா, காஹாங், தெங்காரோ ஆகிய மூன்றில் மஇகா வெற்றி பெற்ற வேளையில், புக்கிட் பத்துவில் தோல்வியடைந்தது.

இதற்கிடையே, கட்சியின் உள்வட்டாரங்களின்படி, இத்தேர்தலில் மஇகா கெமெலா, காஹாங், புக்கிட் பத்து ஆகிய தொகுதிகளைத் தற்காத்துப் போட்டியிடும் வேளையில், தெங்காரோ தொகுதியை அம்னோவுடன் மாற்றிக்கொண்டு பெர்லிங் தொகுதியில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் மஇகா இரண்டு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது என அந்த வட்டாரம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
தேசிய முன்னணிஜோகூர் பாருவெற்றி