தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இயல்புநிலைக்குத் திரும்பும் ஜோகூரின் ‘பிஎஸ்ஐ’ குடிநுழைவு நிலையம்

1 mins read
20b51b63-5c19-4a1c-bed2-bf110110af80
தொழில்நுட்பக் கோளாற்றால் பிரச்சினை எழுந்தது. அதனால் பிஎஸ்ஐ நிலையத்தில் பயணிகள் கூட்டம் சேர்ந்தது. - படம்: தி ஸ்டார் / ஏ‌ஷியா நியூஸ் நெட்வோர்க்

ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவின் பாங்குனான் சுல்தான் இஸ்கந்தர் (பிஎஸ்ஐ) சுங்கத்துறை, குடிநுழைவு, தனிமைப்படுத்தும் நிலையத்தில் உள்ள தானியக்கச் சாவடிகள் அனைத்தும் இப்போது இயங்கிக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாற்றால் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) பிஎஸ்ஐ தானியக்கச் சாவடிகள் இயங்காமல் இருந்தன. அதனைத் தொடர்ந்து அங்குள்ள பேருந்துக் காத்திருப்புப் பகுதிகளில் அதிக கூட்டம் கூடியது.

இப்போது கூட்டம் படிப்படியாகக் கலைந்து வருவதாகத் தெரிவிவக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு நிலவரப்படி பிஎஸ்ஐ நிலையத்தில் பேருந்துகள் வந்து போகும் பகுதிகளில் சுமார் 46 தானியக்கச் சாவடிகள் கட்டங்கட்டமாக மீண்டும் இயங்கத் தொடங்கின.

“படிப்படியாக இயல்புநிலை திரும்புகிறது. விரைவில் முழு இயல்புநிலை திரும்பும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகலிலிருந்து பிஎஸ்ஐ தானியக்கச் சாவடிகள் இயங்காமல் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

கோளாற்றுக்குப் பின்னால் உள்ள காரணம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.

நிலைமை ஆக மோசமாக இருந்த நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பிஎஸ்ஐ நிலையத்தில் நான்கு மணிநேரம் வரை காத்திருக்க நேரிட்டது. குடிநுழைவு அதிகாரிகள் தொழில்நுட்ப உதவியின்றி பயணிகள் விவரங்களைச் சரிபார்க்கவும் வேண்டியிருந்தது.

குறிப்புச் சொற்கள்