கென்னடி சென்டரிலிருந்து டிரம்ப் பெயரை அகற்றுவதை நிறுத்த நீதிபதி மறுப்பு

கென்னடி சென்டரிலிருந்து டிரம்ப் பெயரை அகற்றுவதை நிறுத்த நீதிபதி மறுப்பு

1 mins read
9b798d9f-3f21-4b62-8380-446aad24df95
கென்னடி சென்டரில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள். - படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் கென்னடி சென்டர் எனும் நிலையத்தில் அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பெயரை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்று கோரி அந்நிலையத்தின் நிர்வாகக் குழு சட்டரீதியாக மனு தாக்கல் செய்தது.

அந்த கோரிக்கையை அமெரிக்க நீதிபதி ஒருவர் மறுத்துள்ளார்.

மீண்டும் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு திரு டிரம்ப், அதிகாரபூர்வ இடங்களில் தமது பெயரை வெளிப்படுத்தும் முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்துவருகிறார். அது, அமெரிக்காவில் தொடரும் அரசியல் கலாசாரத்துக்குப் புறம்பானது.

வா‌ஷிங்டன் நகரின் வரலாற்றுச் சின்னமாக விளங்கும் கென்னடி சென்டரிலிருந்து வெள்ளிக்கிழமைக்குள் (ஜூன் 12) திரு டிரம்ப்பின் பெயர் அகற்றப்படவேண்டும் என்று அமெரிக்க மாவட்ட நீதிபதி கிறிஸ்டஃபர் கூப்பர் தீர்ப்பளித்திருந்தார். அந்தத் தீர்ப்பைத் தற்போதைக்கு நடைமுறைப்படுத்தவேண்டாம் என்று கோரி கென்னடி சென்டரின் நிர்வாகத்தினர் வியாழக்கிழமை (ஜூன் 11) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். அந்தக் குழுவில் திரு டிரம்ப்பின் பங்காளிகளும் அடங்குவர்.

அந்தக் கோரிக்கையை நீதிபதி மறுத்தார். அரசாங்கம் மேற்கொள்ளும் சட்டவிரோதச் செயல்கள் மீண்டும் மீண்டும் நடப்பதால் பொதுமக்களின் விருப்பங்கள் பெரும்பாலான வேளைகளில் பூர்த்திசெய்யப்படுவதில்லை என்று அவர் சாடினார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்அமெரிக்காடோனல்ட் டிரம்ப்நீதிபதிநீதிமன்றம்