தோக்கியோ: ஜப்பானில் 17 விழுக்காடு குடிமக்களிடம் மட்டுமே கடப்பிதழ் இருப்பதாக புதிய தரவுகள் காட்டுகின்றன.
கொவிட்-19 கொள்ளைநோய்க்குப் பிறகு வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் முன்பு இருந்த நிலையை இன்னமும் எட்டவில்லை.
2024 டிசம்பர் நிலவரப்படி, 21.6 மில்லியன் பேர் தகுதியான கடப்பிதழ் வைத்திருந்தனர். இது, ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 17.5 விழுக்காடு என்று ஜப்பானிய வெளியுறவு அமைச்சு பிப்ரவரி 21ஆம் தேதி தெரிவித்தது.
கொவிட்-19க்கு முன்பு ஜப்பானியர்களில் கால்வாசி பேரிடம் சொந்தமாக கடப்பிதழ் இருந்தது.