தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணமேடை ஏறும் வேளையிலும் மறக்காத 'பாலக' பழக்கம்

2 mins read
9ac31aff-029b-461e-8aed-ba61a8f2373f
பேரதிர்ச்சியைத் தரும் காட்சியைக் கண்டும்கூட, மணமகனைத் திருமணம் செய்துகொள்ள மணப்பெண் முடிவெடுத்தார். படம்: இணையம் -

திருமண வைபவங்களுக்குத் திட்டமிடுதல் பணிகளை மேற்கொள்ளும் பிரிட்டனைச் சேர்ந்த ஜார்ஜி மிஷெல் என்பவர், மணமேடை ஏறும் வேளையில் மணமகள் ஒருவர் கண்ட காட்சி, அவரை அதிரவைத்ததாகக் கூறினார்.

தம்மைக் கரம்பிடிக்கவிருந்த மணமகனுக்கு அவருடைய தாயார் இன்னமும் தாய்ப்பால் ஊட்டுவதைக் கண்டு அப்பெண் பேரதிர்ச்சி அடைந்தார்.

அந்த மணமகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி நிகழ்வை வலையொளி ஒன்றில் மிஷெல் பகிர்ந்தார். பெத் ஸ்மித் என்பவரும் இந்த வலையொளியில் பங்கேற்றார்.

இந்த வினோத காட்சியை மிஷெல் பார்க்கவில்லை. மாறாக, அவருடைய முக ஒப்பனைக் கலைஞர்களில் ஒருவர் நடந்ததை மிஷெலிடம் எடுத்துரைத்தார். அவருடைய அடையாளத்தை வெளிப்படுத்த மறுத்த மிஷெல், அவரை ஜென்னி என்று மட்டுமே அழைத்தார்.

"ஒருநாள் நான் திருமண வைபவத்தில் பணியாற்றினேன். அப்போது என்ன நடந்தது என்பது பற்றி உங்களால் ஊகிக்கவே முடியாது," என்று ஜென்னி கூறியதை மிஷெல் பகிர்ந்தார்.

மணமேடையில் ஏறுவதற்கு முன்பு மணமகள் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆனால், கழிப்பறைக்குள் அவர் நுழைந்தபோது அவருக்குக் காத்திருந்தது பேரதிர்ச்சி.

"அந்த மணமகனுக்கு அவருடைய தாயார் தாய்ப்பால் ஊட்டிக்கொண்டு இருந்ததை மணப்பெண் பார்த்தார்," என்று மிஷெல் கூறியதும் ஸ்மித் அதிர்ந்துப் போனார்.

அந்தத் தாயாருக்கு எப்படி இன்னமும் பால் சுரக்கிறது என்பது பற்றி ஸ்மித்துக்கு ஒரே ஆச்சரியம். மணமகனுக்கு அவர் தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்தாததே காரணமாக இருக்கலாம் என்று மிஷெல் ஊகித்தார்.

பேரதிர்ச்சியைத் தரும் காட்சியைக் கண்டும்கூட, மணமகனைத் திருமணம் செய்துகொள்ள மணப்பெண் முடிவெடுத்ததாக மிஷெல் கூறினார். மணமகன், மணமகளின் அடையாளம் தெரியவில்லை.