நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் வெள்ளை மாளிகையில் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். அவர் வெற்றிபெற்றால் எட்டு ஆண்டுகளில் பீர் குடிக்கும் விருப்பத்தை வெளியிட்டுள்ள முதல் அதிபராவார்.
டோனல்ட் டிரம்ப், ஜோ பைடனுக்கு மாறாக, திருமதி ஹாரிஸ் செவ்வாய்க்கிழமை இரவு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பீர் குடித்தார்.
நிகழ்ச்சி படைப்பாளர் ஸ்டீஃபன் கோல்பெர்ட் உடனான நேர்காணலில் ‘மில்லர் ஹை லைஃப்’ பீர் கேனை திறந்து ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளரான திருமதி ஹாரிஸ் குடித்தார்.
4.6 விழுக்காடு ஆல்கஹால் கலந்துள்ள ‘மில்லர் ஹை லைஃப்’ பீர் கேனை கையில் எடுத்தபோது , கடைசியாக தனது கணவர் டோஃக் எம்ஹோஃபுடன் பீர் அருந்தியதாக அவர் சொன்னார்.
“டோகுடன் ‘பேஸ்பால்’ விளையாட்டு ஒன்றை பார்த்தபோது கடைசியாக பீர் குடித்தேன்,” என்றார் திருமதி ஹாரிஸ்.
“பீர் குளிர்ச்சியாக உள்ளது, விஸ்கான்சின்னில் உள்ள மில்வாக்கி நகரிலிருந்து வந்த அழகிய பீர்,” என்றார் நெறியாளர்.
2024ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் ஏழு முக்கிய மாநிலங்களில் விஸ்கான்சினும் ஒன்று.
‘பீர்களின் ஷேம்பைன்’ என்று திருமதி ஹாரிஸ் குறிப்பிட்டார். ‘மில்லர் ஹை லைஃப்’ பீர் தயாரிப்பாளர்களின் வியாபார முழக்க வரி அது.
தொடர்புடைய செய்திகள்
பல்வேறு ஊடக நிகழ்ச்சிகளில் கமலா ஹாரிஸ் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
அதன் ஒர் அங்கமாக இதற்கு முன்பு தொலைக்காட்சி பிரபலமான ஹவர்ட் ஸ்டெர்னனுடன் 70 நிமிட நேர்காணலிலும் அவர் பங்கேற்றார்.