தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தோல்வியை ஒப்புக்கொண்டபோதிலும் தொடர்ந்து போராடப்போவதாக கமலா சூளுரை

1 mins read
47ddeb45-f0b6-4eea-b48f-e9619baf65ad
தமது ஆதரவாளர்களிடம் கமலா ஹாரிஸ் பேசியபோது அவரது குரல் அவ்வப்போது தழுதழுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டோனல்ட் டிரம்ப்பிடம் ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், தோல்வியை ஒப்புக்கொண்ட கமலா ஹாரிஸ், தமது கொள்கைகளை முன்னிறுத்தி தொடர்ந்து போராட இருப்பதாக சூளுரைத்துள்ளார்.

வாஷிங்டனில் உள்ள ஹவர்ட் (Howard) பல்கலைக்கழகத்தில் கூடிய தமது ஆதரவாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்களில் பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.

கமலா ஹாரிஸ் ஹவர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

தமது ஆதரவாளர்களிடம் கமலா பேசியபோது அவரது குரல் அவ்வப்போது தழுதழுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பெண்ணுரிமைக்காகத் தொடர்ந்து போராட இருப்பதாக அவர் கூறினார்.

அதே சமயத்தில், துப்பாக்கி வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்பதை நிறுத்தப்போவதில்லை என்றார் அவர்.

அனைவரின் கௌரவத்தைக் கட்டிக்காக்க முழுவீச்சுடன் செயல்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்