‘எங்கள் காலத்தின் வேட்பாளர்’: பிரபல இதழின் முகப்புப் பக்கத்தில் கமலா ஹாரிஸ்

‘எங்கள் காலத்தின் வேட்பாளர்’: பிரபல இதழின் முகப்புப் பக்கத்தில் கமலா ஹாரிஸ்

படம்: ஏஎஃப்பி

12 Oct 2024 - 5:40 pm

1 mins read

வாஷிங்டன்: அமெரிக்கத் துணை அதிபரும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ், 59, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) வோக் (Vogue) இதழின் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளார். அதில், ‘எங்கள் காலத்தின் வேட்பாளர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபல புகைப்படக் கலைஞர் அன்னி லீபோவிட்ஸ் எடுத்த அப்புகைப்படத்தில் சாக்லெட் நிற சூட், பட்டு சட்டை அணிந்திருந்த திருவாட்டி ஹாரிஸ், ஒரு நாற்காலியில் அமர்ந்து காட்சியளிக்கிறார்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் பற்றி திருவாட்டி ஹாரிஸ் அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால், அதிபராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர என்ன செய்வார் என்பது பற்றி அவர் அவ்வளவாகக் கூறவில்லை.

2021ல் திருவாட்டி ஹாரிஸ் துணை அதிபராகப் பதவியேற்ற வேளையில் வோக் இதழின் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றிருந்தார்.

View post on Instagram
 
குறிப்புச் சொற்கள்