கங்கார் பிகேஆர் நிலவரம் திரிக்கப்பட்டு, பெரிதுபடுத்தப்படுகிறது: மலேசிய அரசியல் வட்டாரம்

கங்கார் பிகேஆர் நிலவரம் திரிக்கப்பட்டு, பெரிதுபடுத்தப்படுகிறது: மலேசிய அரசியல் வட்டாரம்

1 mins read
53cebb7d-f2ed-4fd2-ad4e-7c883a9c3e62
சம்பந்தப்பட்ட நபர்கள் கடந்த மாதமே அமைதியாகத் தங்கள் குழு உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகியதாகவும் ஆனால் கட்சியிலிருந்து விலகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. - படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கங்கார்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் கட்சி கெஆடிலான் (பிகேஆர்). இந்நிலையில், பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரான கங்காரில் பிகேஆர் கட்சியினர் ஒட்டுமொத்தமாகப் பலர் பதவி விலகியதாகக் தகவல் வெளியானது.

இது உண்மையல்ல என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. மேலும், இந்தச் சூழ்நிலை தொகுதியின் தற்போதைய தலைமையால் கையாளப்பட்டுள்ளது என்று கட்சிக்காரர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட நபர்கள் கடந்த மாதமே அமைதியாகத் தங்கள் குழு உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகியதாகவும் ஆனால் கட்சியிலிருந்து விலகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

“இது கட்சியைப் பலவீனப்படுத்துவதைப் பற்றியது அல்ல. புதிய தொகுதித் தலைவருடன் அவர்களால் இணைந்து பணியாற்ற முடியவில்லை என்பதுதான் காரணம்,” என்று வியாழக்கிழமை (ஏப்ரல் 23) தி ஸ்டார் நாளிதழிடம் தெரிவிக்கப்பட்டது.

புதிய தொகுதித் தலைவரான நூர் அமின் அகமதுதான் இந்தப் பிரச்சினையைப் பெரிதுபடுத்தினார் என்றும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் அல்ல என்றும் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் குறை கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபிகேஆர்அரசியல்

தொடர்புடைய செய்திகள்