காமெனியின் இறுதிச் சடங்கில் அவர் பதவியை எடுத்துக்கொண்ட மகன் இல்லை

காமெனியின் இறுதிச் சடங்கில் அவர் பதவியை எடுத்துக்கொண்ட மகன் இல்லை

1 of 2
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: ராய்ட்டர்ஸ்

05 Jul 2026 - 5:07 pm

1 mins read

டெஹ்ரான்: ஈரானின் மறைந்த முன்னாள் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியின் இறுதிச் சடங்கில் அவரின் மூன்று மகன்கள் பங்கேற்றனர்.

எனினும், அவரின் பொறுப்பேற்றுக்கொண்ட மகனான மொஜ்டாபா சடங்கில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மூன்று மகன்களான மொஸ்தாஃபா, மெசாம், மசூட் ஆகியோர் திரு காமெனியின் உடல் இருந்த சபப் பெட்டிக்கு அருகே பிரார்த்தனையில் ஈடுபட்டது ஈரான் அரசாங்கத்திற்கான தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.

இறுதிச் சடங்கு தலைநகர் டெஹ்ரானின் இமாம் கொமெய்னி கிராண்ட் மொசால்லா எனப்படும் பெரிய சமய வளாகத்தில் நடைபெற்றது.

திரு காமெனியின் இறுதிச் சடங்கை ஒரு வாரத்துக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

திரு மொஜ்டாபா இன்னமும் யார் கண்ணிலும் படவில்லை. அவர் இருக்கும் படங்களும் இதுவரை வெளிவிரவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தந்தையையும் மற்ற குடும்பத்தாரையும் கொன்ற தாக்குதலில் மொஜ்டாபா காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அன்றைய நாள்தான் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீதான போரைத் தொடங்கின.

தாக்குதலில் மொஜ்டாபாவின் முகம் அடையாளம் தெரியாத அளவு காயமடைந்ததாகம் அவரின் ஒரு கால் அல்லது இரு கால்களும் மோசமாகக் காயமடைந்ததாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
உலகம்ஈரான்அமெரிக்காஇஸ்ரேல்