எப்போது வேண்டுமானாலும் அணுவாயுதத்தைப் பயன்படுத்துவோம்; வடகொரியா மிரட்டல்

எப்போது வேண்டுமானாலும் அணுவாயுதத்தைப் பயன்படுத்துவோம்; வடகொரியா மிரட்டல்

28 Mar 2023 - 3:44 pm

1 mins read

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தமது நாடு எப்போது வேண்டுமானாலும் அணுவாயுதத்தைப் பயன்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்கொரியாவில் அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்கியுள்ளன, அதைத் தொடர்ந்து திரு கிம் அந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அணுகுண்டுகள் செய்யும் இடம் ஒன்றை பார்வையிட்டபோது கிம் எச்சரித்ததாக வடகொரிய ஊடகங்கள் குறிப்பிட்டன.

அண்மையில் தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடத் திட்டமிட்டனர். அதைக் கண்டிக்கும் விதமாக வடகொரிய கடந்த சில வாரங்களாக அணுவாயுதம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

வடகொரியாவிடம் வெடிகுண்டுடன் கூடிய ஏறக்குறைய 90 ஏவுகணைகள் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. எதிர்காலத்தில் அவற்றின் எண்ணிக்கையை 300 வரை உயர்த்தவும் வடகொரியா திட்டமிடுவதாக ஊடகங்கள் கூறுகின்றன.

வடகொரியாவின் எச்சரிக்கையால் கொரிய தீபகற்பத்திலும் வட்டார நாடுகளிலும் பதற்றம் நிலவுகிறது

குறிப்புச் சொற்கள்
தென்கொரியாஅமெரிக்கா