நான்கு வயது தனேஸ் மரணம்: பாலர் பள்ளி ஆசிரியர்மீது குற்றச்சாட்டு

நான்கு வயது தனேஸ் மரணம்: பாலர் பள்ளி ஆசிரியர்மீது குற்றச்சாட்டு

1 mins read
25026e97-4c91-484a-9e3c-1531e9c1e48e
நான்கு வயதுச் சிறுவன் நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்ததன் தொடர்பில், பாலர் பள்ளி ஆசிரியர் எஸ்தர் கிறிஸ்டினாமீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. - படம்: தி ஸ்டார்

ஈப்போ: மலேசியாவின் ஈப்போ மாநிலத்தில் உள்ள ஒரு பாலர் பள்ளியின் நீச்சல் குளத்தில் விழுந்து நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான், .

அதன் தொடர்பில், அவன் படித்த பாலர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் எஸ்தர் கிறிஸ்டினா, 58, மீது அங்குள்ள நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த நேரத்தில், அவர் அச்சிறுவனைப் பொறுப்புடன் கவனிக்காமல், கண்காணிப்பின்றி அவனை நீச்சல் குளத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குத் தனியாக விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஏப்ரல் 17ஆம் தேதி பண்டார் ஸ்ரீ கிளபாங்கில் காலை மணி 10.20க்குச் சம்பவம் நிகழ்ந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், எஸ்தருக்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை, அதிகபட்சமாக RM20,000 அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட்டலாம்.

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டம் ஒன்றில், பாலர் பள்ளி நிர்வாகம் கவனக்குறைவாகச் செயல்பட்டதாய் அந்தச் சிறுவனின் தாயார் நீலவேணி, 40, குற்றஞ்சாட்டினார்.

தமது ஒரே மகனான தனேஸ் நாயர் சம்பவ நாளன்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஏப்ரல் 23ஆம் தேதி அவனது உயிர்பிரிந்ததாகவும் அவர் சொன்னார்.

ஆசிரியர் எஸ்தருக்கு 2,500 ரிங்கிட் பிணைத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்