கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ‘கேஎல் டவர்’ கட்டடம் சனிக்கிழமை (ஏப்ரல் 26) அதிகாரபூர்வமாக மீண்டும் திறக்கப்பட்டது.
புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு அக்கட்டடம் மீண்டும் திறக்கப்பட்டது. அதன் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டன.
வருகையாளர்களுக்கு மேலும் சிறப்பான சூழலை உருவாக்கித் தருவதற்காக ‘கேஎல் டவர்’ கட்டடத்தின் கண்காணிப்புக் கூடம் (Observation Deck) மேம்படுத்தப்பட்டது, வருகையாளர் பாதுகாப்பை மேம்படுத்த கண்ணாடித் தடங்கள் போடப்பட்டது, புதிய சமையலறைக் கருவிகள் சேர்க்கப்பட்டது உள்ளிட்டவை புதுப்பிப்புப் பணிகளில் அடங்கும்.
புதுப்பிக்கப்பட்ட ‘கேஎல் டவர்’ தொடர்ந்து உள்ளூர் வெளிநாட்டு வருகையாளர்களை ஈர்க்கிறது என்று பெர்னாமா செய்தி நிறுவனம் அறிவதாக மலாய் மெயில் ஊடகம் தெரிவித்தது.

