கேடிஎம்பி ரயில் சேவை; வார நாள்களில் பயணச்சீட்டு கட்டணத்தில் 30% சலுகை

கேடிஎம்பி ரயில் சேவை; வார நாள்களில் பயணச்சீட்டு கட்டணத்தில் 30% சலுகை

2 mins read
விலைச் சலுகை ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதத்தின் வார நாள்களில் இருக்கும்
aef40158-3b40-4515-86cc-c59f5715e10c
மக்கள் பொதுப் போக்குவரத்தை அதிகமாகப் பயன்படுத்த வேண்டுமென்பதும் ரயில் சேவை கட்டமைப்பை முழுவதும் பயன்படுத்த வேண்டுமென்பதும் விலைச் சலுகைக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. - படம்: த நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், கேடிஎம்பியின் மின்சார ரயில், விரைவு ரயில் சேவைகளுக்கான பயணச்சீட்டு விலையை 30 விழுக்காடு குறைத்துள்ளார்.

இந்த விலைச் சலுகை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதத்தின் வார நாள்களில் மட்டும் இருக்கும்.

மக்கள் பொதுப் போக்குவரத்தை அதிகமாகப் பயன்படுத்த வேண்டுமென்பதும் ரயில் சேவை கட்டமைப்பை முழுவதும் பயன்படுத்த வேண்டுமென்பதும் விலைச் சலுகைக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.

பொதுமக்கள் அதிக அளவில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதால் நாடளவில் எரிசக்திக்கான தேவை குறையும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பூசல் காரணம் உலக அளவில் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவும் மலேசியா தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

“ ரயில் பயணச்சீட்டுகளின் விலைச் சலுகை திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை இருக்கும்.

“தரவுகள்படி இந்த நான்கு வார நாள்களில் ஒவ்வொரு ரயில் பயணத்தின் போதும் மூன்றில் ஓர் இருக்கை காலியாக உள்ளது,” இதற்குத் தீர்வுகாணப் புது முயற்சி இது என்றார் அமைச்சர் லோக்.

“அதிக அளவில் மக்கள் ரயில் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த 30 விழுக்காடு விலைச் சலுகை வழங்கப்படுகிறது,” என்று திரு லோக் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஏப்ரல் 15 - அக்டோபர் 14 கான ரயில் பயணச்சீட்டுகளை ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் பொது மக்கள் வாங்க வேண்டும். அந்த ரயில் பயணச்சீட்டுகளுக்கு மட்டுமே விலைச் சலுகை.

ஜேபி சென்ட்ரல்- தும்பத்- ஜேபி சென்ட்ரல் பாதைக்கான விரைவு ரயில் சேவைக்கு மட்டுமே பயணச்சீட்டு விலை 30 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த விலைச் சலுகை பொது விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறை நாள்களில் அளிக்கப்படாது.

குறிப்புச் சொற்கள்