பெருகும் குற்றங்களை விரைந்து தடுக்க கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் வலியுறுத்து

பெருகும் குற்றங்களை விரைந்து தடுக்க கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் வலியுறுத்து

2 mins read
fa4d8cda-b013-4460-87b9-799af1588561
கோலாலம்பூர் காவல்துறையின் மாதாந்தரக் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) இரவு நடைபெற்றது. - படம்: த ஸ்டார்

கோலாலம்பூர்: உருமாறி வரும் குற்றங்களை எதிர்கொள்ள கோலாலம்பூர் காவல்துறையினர் நவீன தொழில்நுட்பத்தையும் விரைவான நடவடிக்கை மற்றும் வலுவான கூட்டுப் பணியையும் பயன்படுத்த வேண்டும் என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் ஃபாதில் மார்சஸ் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் அதிநவீனச் சாதனங்களைப் பயன்படுத்தி வரும் சூழலில், பொதுமக்கள் காவல்துறை மீது வைத்துள்ள எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

எனவே, காவல்துறையினர் விரைவாகச் செயல்பட்டு, குற்றவாளிகளுக்கு ஒரு படி முன்னதாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

எல்லா உள்ளூர் காவல்துறையினரும் தங்களது பணிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து, குற்றங்களைத் தடுப்பதற்கான சிறந்த வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றும் திரு ஃபாதில் கேட்டுக்கொண்டார்.

வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) இரவு நடைபெற்ற கோலாலம்பூர் காவல்துறையின் மாதாந்தரக் கூட்டத்தில் பேசிய அவர், “நாம் அடைந்த வெற்றிகளோடு திருப்தியடைந்து நின்றுவிடக் கூடாது,” என்றார்.

மேலும், “நமது பலவீனங்களைச் சரிசெய்து, நமது பலங்களை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும்,” என்று குறிப்பிட்டதோடு, “நாம் விரைவாகவும் துல்லியமாகவும் நிபுணத்துவ முறையிலும் பணியாற்ற வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ள நேர்மையும் சிறந்த ஒழுக்கமுமே மிக முக்கியமானவை என்பதை திரு ஃபாதில் சுட்டிக்காட்டினார்.

2024ஆம் ஆண்டின் உலகளாவிய அமைதிக் குறியீட்டில் 12வது இடத்தையும் உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டில் 57வது இடத்தையும் பிடித்துள்ள மலேசியா, தொடர்ந்து பாதுகாப்பான நாடாகவே திகழ்கிறது என்றார் அவர்.

உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் இந்த நற்பெயரைத் தக்கவைக்க, எல்லா அதிகாரிகளும் ஒரு குழுவாக இணைந்து செயல்பட திரு ஃபாதில் அழைப்பு விடுத்தார்.

குறிப்புச் சொற்கள்
காவல்துறைநடவடிக்கைதொழில்நுட்பம்