தொழில்நுட்பம் இப்போது செய்தித்துறையிலும் முன்னேற்றம் கண்டுள்ளது.
குவைத்தில் உள்ள செய்தி நிறுவனம் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு செய்தி வாசிக்கும் செய்தியாளரை உருவாக்கியுள்ளது.
குவைத் நியூஸ் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கிய ஃபெதா என்னும் பெண் செய்தியாளரை டுவிட்டர் மூலம் ஏப்ரல் 9ஆம் தேதி அறிமுகப்படுத்தியது.
அரபு மொழியில் அட்டகாசமாக ஃபெதா பேசிய காணொளியையும் நிறுவனம் வெளியிட்டது.
இதுபோன்ற முயற்சியை சீனா 2018ஆம் ஆண்டு செய்தது குறிப்பிடத்தக்கது.
செயற்கை நுண்ணறிவு மூலம் உலகில் கிட்டத்தட்ட 300 மில்லியன் வேலைகள் பறிபோகலாம் என்று அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளன.

