ஈரான் வானூர்தித் தாக்குதலில் குவைத் எண்ணெய் அலுவலகம் தீப்பற்றியது

ஈரான் வானூர்தித் தாக்குதலில் குவைத் எண்ணெய் அலுவலகம் தீப்பற்றியது

படம்: ஏஃப்பி

05 Apr 2026 - 9:12 am

1 mins read

குவைத்: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் எண்ணெய்வள அமைச்சு அமைந்துள்ள குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் தலைமையகம் மீது ஈரான் வானூர்தித் தாக்குதலை நடத்தியுள்ளது.

பாரசீக வளைகுடாவில் ஈரான் நடத்திய ஆக அண்மைய தாக்குதல் அது. அந்தத் தலைமை அலுவலகக் கட்டடம் தீக்கிரையானது.

சேதமுற்ற அந்தக் கட்டடத்திலிருந்தோர் வெளியேற்றப்பட்டு தீயணைப்புப் படையினர் அங்குக் குவிக்கப்பட்டதாக கேபிசி செய்தி அறிக்கையை மேற்கோள் காட்டி புளூம்பெர்க் கூறியது.

முன்னதாக, தனது வான் எல்லையில் ஊடுருவும் ஏவுகணைகள் மற்றும் வானூர்திகளை இடைமறிக்கும் பணியில் தனது வான் தற்காப்புப் படைகள் ஈடுபட்டுள்ளதாகக் குவைத் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாக ஏஎஃப்பி செய்தி குறிப்பிட்டது.

வேறொரு சம்பவத்தில் ஈரானிய வானூர்தி கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 4) நடத்திய தாக்குதலில் அரசாங்கக் கட்டடம் ஒன்று சேதமடைந்ததாக குவைத் நிதி அமைச்சு கூறியிருந்தது.

குறிப்புச் சொற்கள்
குவைத்ஐக்கிய அரபு சிற்றரசுகள்ஈரான்