ஷாங்காய்: சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாநிலத்தில் கனத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
அதில் ஒருவர் மாண்டார். மேலும் கிட்டத்தட்ட 30 பேரை காணவில்லை என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜின்பிங் கிராமத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 8) காலை 11.50 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. 900க்கும் அதிகமான அதிகாரிகள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
அண்மைக் காலமாக சீனாவை இயற்கை பேரிடர்கள் கடுமையாகத் தாக்கி வருகின்றன. சீனாவில் ஆக வெப்பமிக்க ஆண்டான 2024ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளங்களில் பலர் மாண்டுபோயினர்.

