பூமிக்குக் கொண்டுவரப்படும் ஆகப் பெரிய விண்கல் மாதிரி

1 mins read
ccb2ed78-b668-42d7-8381-bc54a72a29e1
2018 டிசம்பர் 2ஆம் தேதி எடுக்கப்பட்ட ‘பென்னு’ என்ற சிறுகோளின் படம். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

லாஸ் ஏஞ்சலிஸ்: மூவாண்டுகளுக்குமுன் ஒரு விண்கோளின் மேற்பரப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட விண்கல் மாதிரி பூமிக்குக் கொண்டுவரப்படுகிறது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான ‘நாசா’வின் சிறுவிண்கலம் ஒன்று அதனை எடுத்து வருகிறது.

வட்ட வடிவமான அவ்விண்கலம் சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 10.55 மணியளவில் யூட்டா பாலைவனத்தில் அது தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரிமம் மிகுதியாக உள்ள பென்னு என்னும் சிறுகோளிலிருந்து அந்த விண்கல் மாதிரி சேகரிக்கப்பட்டது. அச்சிறுகோள் ஏறத்தாழ 500 மீட்டர் விட்டம் கொண்டது.

சிறுவிண்கலம் எடுத்துவரும் விண்கல் மாதிரி, முதற்கட்ட ஆய்விற்காக ஹெலிகாப்டர் மூலம் யூட்டா ஆய்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்லப்படும். பின்னர் அங்கிருந்து ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

அவ்விண்கல் மாதிரி சிறு துண்டுகளாக்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள 60 ஆய்வுக்கூடங்களைச் சேர்ந்த 200 அறிவியல் வல்லுநர்களுக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்